முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் சந்திப்பு

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தியை தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கண்ணன் தலைமையில் சந்திக்கும் கூட்டம் நடைபெற்றது இதில் சந்திப்பில் மாவட்ட பொருளாளர் தென்னரசு உள்ளிட்ட மாவட்ட, வட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது அனைத்து கோரிக்கைகளையும் உடனடியாக சரி செய்து தருவதாக முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி உறுதியளித்தார் அவருக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

71 − = 70