முதன்முறையாக தனது மகளை வெளியுலகுக்கு காட்டிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்

வடகொரியாவில் நடக்கக் கூடிய விஷயங்கள் வெளியுலகிற்கு பரவலாக தெரிவதில்லை. அதிபர் கிம் ஜாங் உன் குடும்பம் பற்றிய தகவலிலும் ரகசியம் காக்கப்பட்டு வருகிறது. இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் என மொத்தம் 3 குழந்தைகள் உள்ளனர் என நம்பப்படுகிறது. அவர்களில் ஒருவர் கடந்த செப்டம்பரில் நடந்த தேசிய விடுமுறை தின கொண்டாட்டத்தின்போது, வெளியான புகைப்படத்தில் காணப்பட்டார். இந்நிலையில், முதன்முறையாக ஏவுகணை சோதனை நிகழ்வின்போது, தனது மகளையும் உடன் அழைத்துச் சென்ற கிம், அது தொடர்புடைய புகைப்படங்களை முதன்முறையாக உலகிற்கு இன்று தெரியப்படுத்தி உள்ளார். அதில், வெண்ணிறத்தில் கோட் அணிந்தபடி தனது தந்தையின் கைகளை பிடித்தபடி கிம்மின் மகள் நடந்து செல்வது போல் படம் உள்ளது.

கிம் ஜாங் உன்னுக்கு மகள் இருப்பது பற்றி வெளியுலகுக்கு இதற்கு முன் தெரியாத நிலையில், இது பெரிய ஆச்சரியம் ஏற்படுத்தி உள்ளது என அந்நாட்டில் இருந்து வெளிவரும் கே.சி.என்.ஏ., என்ற செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. எனினும், கிம்மின் மகள் பெயர் வெளியிடப்படவில்லை.

இதுபற்றி அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஸ்டிம்சன் மையத்தின் வடகொரிய தலைமை நிபுணரான மைக்கேல் மேடன் கூறுகையில், கிம்மின் மகளை பொது நிகழ்ச்சியில் முதன்முறையாக பார்க்கும் தருணம் இது. இதன்படி, கிம்மின் மகளுக்கு தற்போது 12 முதல் 13 வயது இருக்கக் கூடும். அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் கிம்மின் மகள் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கோ அல்லது ராணுவ சேவையில் ஈடுபடவோ தயாராகக் கூடும். கிம்மின் மகள், நாட்டின் தலைமைத்துவத்திற்கான படிப்பு மற்றும் பயிற்சி பெறுவார் என்பதற்கான அடையாளமாக அவர் வெளியுலகுக்கு வந்துள்ளார். அவர் தனது அத்தையை போன்று, ஓர் ஆலோசகராக, செயல்களை பின்னின்று நடத்துபவராக இருப்பார் என மேடன் கூறியுள்ளார்.

வெளியுலகுக்கு கிம் ஜாங் உன் மகள் அடையாளப்படுத்தப்பட்டு இருப்பது சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பரபரப்புடன் பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + 1 =