மின்னணு தேசிய வேளாண் சந்தையில் விவசாய பொருள் விற்பனை விவசாயிகளுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்டத்தில் மாவட்ட விற்பனைக்குழு காட்டுப்பாட்டில் இயங்கும் உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சங்கராபுரம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் முறையே 2017ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி, 2018ம் ஆண்டு மார்ச் 21, 2020ம் ஆண்டு ஏப்ரல் 29 முதல் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது சின்னசேலம் மற்றும் மணலூர்பேட்டை ஆகிய விற்பனைக்கூடங்களிலும் இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பயன்பெறும் பொருட்டு 2016ம் ஆண்டில் மத்திய அரசால் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம்  கொண்டு வரப்பட்டது. இதில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை ஆன்லைன் மூலமாக தேசிய அளவிலான சந்தையில் விற்பனை செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது. வேளாண் விளைபொருள் வர்த்தகத்தில் வெளிப்படை தன்மையை உறுதிபடுத்துவதும், அதிக அளவிலான சந்தைகளை அணுக வாய்ப்பு ஏற்படுத்தி தருவதும், அதிக அளவிலான வணிகர்களை கொள்முதலில் பங்கேற்க செய்வதும் விரைவாக மின்னணு வேளாண் சந்தைதிட்டம் மூலம் பணப்பட்டுவாடா செய்யப்படுவதும் மின்னணு தேசிய வேளாண் சந்தை ஆன்லைன் பரிவர்த்தனையின் சிறப்பம்சமாகும்.

தமிழ்நாட்டில் 127 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மின்னணு தேசியவேளாண் சந்தை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வரத்து வரப்பெறும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ஒரே நேரத்தில் ஆன்லைன் மூலம் மறைமுக ஏலம் நடத்தப்பட்டு வியாபாரிகள் தங்களின் கைபேசி மூலம் விலை நிர்ணயம் செய்ய  அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிக போட்டி ஏற்பட்டு விவசாயிகளுக்கு நல்லவிலை கிடைக்க வாய்ப்புண்டு.

ஒருங்கிணைந்த ஒற்றை உரிமம் பெற்றுள்ள வணிகர்கள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொள்முதல் செய்ய அனுமதிக்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் விற்று பயனடையலாம். வியாபாரிகள் 100 சதவீதம் மின்னணு தேசிய வேளாண் சந்தை லைவ் டிரேடிங் முறையினை செயல்படுத்திட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

63 − = 53