மின்சார பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கடையநல்லூர் கோட்டம் சார்பாக மின்சார பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் இன்று புளியங்குடியில் நடந்தது.

கடையநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் பிரேமலதா, களப்பணியாளர்கள் பாதுகாப்பாக கவனமுடன் பணிபுரிவதற்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார். நிகழ்ச்சியில் திருநெல்வேலி மண்டல பாதுகாப்பு அதிகாரி பேச்சிமுத்து, மின் விபத்துக்கள் நடந்த விதம் அதை தவிர்த்து இருக்க வேண்டிய வழிமுறைகளை காணொலி மூலம் கோட்ட களப்பணியாளர்களுக்கு எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர்கள் பூபாலன், முத்தையா, முத்துக்குமார், சின்னத்துரை, தொ.மு.சா. கடையநல்லூர் மற்றும் உதவி பொறியாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

53 − = 44