மின்சார குறை இருந்தால் தெரிவிக்கலாம்

மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர் தங்களது குறைகளை நாளை நேரில் தெரிவிக்கலாம் என்று புதுக்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளர் அசோக்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் புதுக்கோட்டை மீன் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் சேகர் தலைமையில், புதுக்கோட்டை கோட்டத்திற்கு உட்பட்ட புதுக்கோட்டை, இலுப்பூர் மற்றும் கந்தர்வகோட்டை பகுதிக்கான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூலை 7ஆம் தேதி நாளை காலை 11 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை புதுக்கோட்டை  செயற்பொறியாளர் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளதால் மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

51 + = 52