மின்சாரவாரியத்தின் கடன் 1. 34 லட்சம் கோடி: தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை தகவல்

தமிழக அரசு 22815 கோடி கடனை ஏற்றுக்கொண்டாலும், மின்சார வாரியத்தின் கடன்  31.03.2021 வரை 1,34,119.94 கோடியாக உள்ளது  என்று  தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் கடன்  31.03.2021 வரை   25,568.73 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் கடந்த 10 ஆண்டுகளில் 7 வருடங்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதன் காரணமாக 31.03.2021 வரை இழப்புகள் 6,782.35 கோடியாக அதிகரித்துள்ளதாவும்,  நடப்பு நிதியாண்டில் வருவாய் இழப்புகள் 1,778.17 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 28 = 35