மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்- கலெக்டர் தகவல்

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-2, 2ஏ மற்றும் குரூப்-4ல் அடங்கிய பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கு நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் வருகிற 1ம் தேதி புதன்கிழமை முதல் நடைபெறஉள்ளது.

நேரடி பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் 1:30 வரையும், இணையவழி வகுப்புகள் மதியம் 2:30 முதல் மாலை 5:30 மணி வரையிலும் நடைபெற உள்ளது. ஒவ்வொரு பாடபிரிவிற்கும் தனித்தனி ஆசிரியர்கள் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுவதுடன் ஒவ்வொரு வாரமும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. கடந்த ஓராண்டு காலமாக கொரோனா தடுப்பு நடவடிக்கையின் காரணமாக இணையதளம் மூலம் மட்டுமே நடத்தப்பட்ட இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 1ம் தேதி முதல் நேரடி வகுப்புகளாகவும் நடைபெறஉள்ளது.

போட்டித்தேர்வுக்கு விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிமைய அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். என திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்  முருகேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

87 − 82 =