மாற்றுத்திறன் மாணவருக்கான விழிப்புணர்வு பேரணி அன்னவாசல் ஒன்றியம், கறம்பக்குடியில் நடந்தது

டிசம்பர் 3ம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படும் நிலையில் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த அன்னவாசல் ஒன்றியம் மற்றும் கறம்பக்குடியில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

முக்கணாமலைப்பட்டியில் நடந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட உதவி திட்ட அலுவலர் தங்கமணி தொடங்கி வைத்தார். இதில் புள்ளியியல் அலுவலர் உஷா, வட்டார வளமைய பயிற்றுநர் கவிதா, விஜயகுமார், இயன்முறை மருத்துவர் கோவிந்தசாமி உடனிருந்தனர். காவிரி நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழிப்புணர்வு பேரணியை பள்ளித்தலைமை ஆசிரியர் வின்சென்ட், பள்ளி மேலாண்மைக் குழு  உறுப்பினர்கள் தொடங்கி வைத்தனர்.

கறம்பக்குடி தாலுகா மழையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழிப்புணர்வு பேரணியை தலைமை ஆசிரியர் அரங்கசாமி, வருவாய் ஆய்வாளர் அன்னக்கொடி, மழையூர் காவல் உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோ் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கறம்பக்குடி வட்டார வளமைய சிறப்பாசிரியர்கள் ஜான்சிராணி,  கலைச்செல்வி செய்திருந்தனர். நிகழ்ச்சியில் ஆசிரியர் பயிற்றுநர் செல்லத்துரை மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கோஷங்களை முழக்கி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

43 − 39 =