மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கான நோக்குதல் பயிற்சி

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் வட்டார வளமையத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் அங்கன்வாடி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளர் கவிதா வரவேற்றார்.மேற்பார்வையாளர் ரோஸ்மேரி பயிற்சியில் தலைமை உரையாற்றுகையில்:- இந்த நோக்குநிலை பயிற்சி என்பது மாற்றுத்திறன் குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் முன்னதாகவே குழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலைகளை கண்டறிந்து அதில் குறைபாடு மற்றும் காலதாமதம் இருப்பின் மருத்துவரை அணுகி பயிற்சியினை முன்னதாகவே தொடங்கினால் குறைபாடுள்ள குழந்தைகள் உருவாவதை தடுக்கலாம் என்று ஆலோசனைகளை வழங்கினார்.

பயிற்சியில் பேசிய இயன்முறை மருத்துவர் கோவிந்தசாமி மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்களாகிய உங்களின் முயற்சியே உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். உங்கள் தலை நிற்காத குழந்தை பயிற்சியின் மூலமே தலைநிமிர்ந்து இந்த சமூகத்தில் சாதனை நிகழ்த்தும். அன்னையை போன்று சேவையாற்றும் அங்கன்வாடி பணியாளர்களாகிய நீங்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்து தகவல் கூறி எங்கள் பள்ளி ஆயத்த பயிற்சி மையம் மற்றும் குழந்தை மையத்தில் பயிற்சி பெற்று பயனடைய செய்வது மனநிறைவான பணியாகும்.மூளை முடக்கு வாதம்,தசைசிதைவு, ஆட்டிசம், காதுகேளாமை மற்றும் வாய் பேசாத குழந்தைகளுக்கு தொடர் பயிற்சி இயன்முறை மருத்துவர் மற்றும் சிறப்பு பயிற்றுநர்களால் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.

வலிப்பு ஏற்படும் குழந்தைகளை விழிப்புணர்வோடு பாதுகாக்க வேண்டும். வலிப்பு ஏற்படும் குழந்தைகள் தொடர்ந்து மாத்திரை எடுத்துகொள்வதும் அந்த சமயங்களில் பக்கத்தில் கூர்மையான, கல்போன்ற பொருட்கள் இருந்தால் பாது காப்பாக அகற்றி ஒரு புறமாய் சாய்த்து படுக்க வைக்க வேண்டும். நீர் நிலைகளுக்கு அருகில் அவர்கள் செல்வதை தடுத்து பாதுகாக்க வேண்டும் என்றார். நிகழ்வில் சிறப்பு பயிற்றுநர்கள் சந்திரா, கலைச்செல்வி, ரூபா போன்றோர் பயிற்சியளிக்க ஆசிரியர் பயிற்றுநர்கள் சபாபதி, செந்தில்குமார், உமாமகேஷ்வரி, கலந்து கொண்டு சிறப்பித்தனர். பயிற்சியில் ஐம்பது பேர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

70 − = 69