புதுச்சேரி தவளக்குப்பத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சரோஜா என்பவர் போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்காவிடம் தனது வாழ்வாதாரத்திற்கு உதவும்படி கோரிக்கை வைத்திருந்தார்.
அதன்பேரில், புதுச்சேரி ரவுண்ட் டேபிள் சார்பில் தையல் இயந்திரம் ஒன்றினை ஏற்பாடு செய்து மாற்றுத்திறனாளி பயனாளி சரோஜாவிற்கு தனது காரைக்கால் சட்டப்பேரவை அலுவலகத்தில் போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா தையல் இயந்திரத்தினை வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, புதுச்சேரி ரவுண்ட் டேபிள் நிர்வாகிகள் வெங்கட்ரமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.