மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும்: மாவட்ட ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை UDID வழங்கும் திட்டத்தின்கீழ் விண்ணப்பித்து நிலுவையில் உள்ள மற்றும் நிராகரிப்பு செய்யப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளிடம் புதிதாக விண்ணப்பம் பெறுவதற்கும் மற்றும் UDID அட்டை வேண்டி இது நாள் வரையில் விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகளிடமும்  விண்ணப்பங்கள் பெற்று UDID திட்டத்திற்கான இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் கீழ்காணும் விவரப்படி நடைபெறவுள்ளது.

12.07.2022 செவ்வாய்கிழமை கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும், 13.07.2022 புதன்கிழமை கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திலும், 14.07.2022 வியாழக்கிழமை குளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 15.07.2022 வெள்ளிக்கிழமை இலுப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 16.07.2022 சனிக்கிழமை புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும், 19.07.2022 செவ்வாய்கிழமை பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்திலும், 20.07.2022 புதன்கிழமை மணமேல்குடி வட்டாட்சியர் அலுவலகத்திலும், 21.07.2022 வியாழக்கிழமை திருமயம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 22.07.2022 வெள்ளிக்கிழமை அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்திலும், 23.07.2022 சனிக்கிழமை ஆலங்குடி வட்டாட்சியர்  அலுவலகத்திலும், 26.07.2022 செவ்வாய்கிழமை விராலிமலை வட்டாட்சியர் அலுவலகத்திலும், 27.07.2022 புதன்கிழமை ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெறவுள்ளது.

ஏற்கனவே விண்ணப்பித்து இணையதளம் வாயிலாக நிலுவை/ நிராகரிப்பு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் பெயர் பட்டியல் தங்கள் பகுதியில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வட்டாட்சியர் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தாங்கள் கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொண்டு தங்களுடைய பெயர் நிலுவை/ நிராகரிப்பு பட்டியலில் இருப்பின் மேற்காணும் தங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில், மருத்துவச் சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை தெளிவாக அனைத்து பக்கங்களின் நகல் மற்றும் அசல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் -1 ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பித்திடவும், இனி வரும் காலங்களில் மத்திய அரசின்            இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான  தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு அவசியம்          என்பதால் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு அனைவரும் UDID அட்டை பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 45 = 48