‘மாமன்னன்’ படத்தால் ‘மாவீரன்’ படத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை நடிகர் சிவகார்த்திகேயன்

“கருத்தாக இல்லாமல் சமூக அக்கறையுடன் படம் எடுக்கப்பட்டிருந்தது பிடித்திருந்தது என உதயநிதி கூறினார்” என்று சிவகார்த்திகேயன் பேட்டியளித்துள்ளார்.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மாவீரன்’ திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவரும் இப்படம் குறித்து பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், “மாவீரன் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. புதிய கதைக்களத்தை தேர்ந்தெடுத்தோம். அதனை மக்கள் வரவேற்றுள்ளனர். குறிப்பாக, சண்டைக் காட்சிகளுக்கு மக்களிடைய நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறது.

‘மாவீரன்’ பட தலைப்புக்கு நியாயம் சேர்த்திருக்கிறோம். ‘மாமன்னன்’ படத்தால் ‘மாவீரன்’ படத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. போதுமான திரையரங்குகளை ஒதுக்கியுள்ளனர். உதயநிதி ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு படம் நன்றாக இருக்கிறது. ‘கருத்தாக இல்லாமல் சமூக அக்கறையும் படம் எடுக்கப்பட்டிருப்பது எனக்கு பிடித்துள்ளது’ என்றார். அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என பேசினார்.