
திண்டுக்கல் மாவட்ட கலெக்டரின் முகாம் அலுவலகம் முன்பு இரண்டு குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் சோலைகால் திரையரங்கு அருகே உள்ள சிதம்பரனார் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் பாபு. இவரது மனைவி நாகராணி இவர்களுக்கு யூகேஸ் 15 என்ற மகனும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் பூர்விக சொத்து இதே பகுதியில் உள்ளதாகவும் இந்த சொத்தை பிரித்து தர ரமேஷ் பாபுவின் தந்தையாரும் மற்றும் ஆதிதிராவிட நலத்துறையில் பணிபுரியும் ரமேஷ் பாபுவின் சகோதரர் செல்வ கண்ணன் என்பவர் மறுத்து வருவதாக கூறப்படுகிறது.

ரமேஷ் பாபுவின் மனைவி நாகராணி மற்றும் மகன் மகளுடன் கையில் மண்ணெண்ணெய் கேன் வைத்துக்கொண்டு மாவட்ட கலெக்டர் இல்லம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்பொழுது பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி அவரிடம் விசாரணை செய்தனர். தனது கணவரின் பூர்வீக சொத்தை தனது மாமனார் மற்றும் கணவரின் சகோதரர் செல்வ கண்ணன் ஆகியோர் பிரித்து தர மறுக்கின்றனர். இதன் காரணமாக நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மனு கொடுக்க சென்று அங்கு உள்ள அரசு அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்துவிட்டு வந்தேன். தற்போது வரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று காலை மாவட்ட கலெக்டர் இல்லம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்தேன். எனது குழந்தைகளுக்கும் எனது மாமனாரின் பூர்வீக சொத்து கண்டிப்பாக பிரித்து தர வேண்டும். இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து எனது கணவரின் சகோதரர் செல்வ கண்ணன் பிரச்சனை செய்து வருகிறார் அவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என வலியுறுத்தி தீக்குளிக்க முயற்சி செய்ததாக நாகராணி தெரிவித்துள்ளார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்த அடுத்த நாளே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பெற்ற பிள்ளைகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.