மாநில அளவிலான விளையாட்டு போட்டிக்கு தேர்வான மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாராட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குறு மையங்களான  உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி,  திருக்கோவிலூர், சின்னசேலம், சங்கராபுரம் ஆகிய இடங்களில் குறுமைய அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று, மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.

இதில், உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி  மாணவர்கள் 19 வயதுக்குட்பட்டோர், டேபிள் டென்னிஸ் மற்றும் ஸ்குவாஷ் ஆகிய போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் முதல் இடத்தில் வெற்றி பெற்று மூன்று தங்கப் பதக்கங்களையும், 14, 17 வயதுக்குட்பட்ட இரட்டையர் பிரிவில் முதலிடம் பிடித்து தலா நான்கு பதக்கங்களையும் வென்றனர்.

மேலும், சிலம்பப் போட்டி, கேரம், ஜிம்னாஸ்டிக், ஹாக்கி ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று, மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள மாணவர்கள் தேர்வு பெற்றனர்.

உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன், உதவி தலைமை ஆசிரியர் கோவிந்தன், இருபால் ஆசிரியர்கள் மோகன்ராம், பிரேமா, சங்கர், பாண்டியன், செல்வி, ரமேஷ், உடற்கல்வி ஆசிரியர்கள் நாகராஜன், சிவ.ஈஸ்வரன், ஆனந்த எழிலரசன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

83 − = 80