மாநிலங்களவை தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் வாழ்க்கை குறிப்பு!!!

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட தேர்வாகியுள்ள  தி.மு.க.வேட்பாளர் கே.ஆர்.என்.இராஜேஸ் குமாரின் வாழ்க்கை குறிப்பு.

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் கட்டனாச்சம்பட்டியை சேர்ந்த நடராஜன் மற்றும் உஷா என்பவருக்கு மகனாக 27.03.1977 ல் பிறந்தார். இவரது மனைவி பூங்கொடி ,மகள் மித்ரா ,மகன் பெயர் ஸ்ரீசுதன் . திமுக வேட்பாளர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.காம் .பட்டப்படிப்பும், கூட்டுறவு மேலாண்மை துறையில் பட்டய படிப்பும் பெற்றவர் .

மேலும் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின்  திமுக கழக மூத்த முன்னோடி கே.ஆர்.இராமசாமியின் பேரன் ஆவார். பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியரிடம் நெருங்கி பழகியவர் கே.ஆர்.இராமசாமி. 1967-யில் இவருடைய தாத்தா கே.ஆர்.இராமசாமி  திருச்செங்கோடு நாடாளுமன்ற தேர்தலுக்கு பேரறிஞர் அண்ணா அவர்களால் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் பேரறிஞர் அண்ணா கேட்டுகொண்டதற்கு இணங்க பேராசிரியர் க.அன்பழகனுக்காக விட்டு கொடுத்ததனால் அவருடன் நெருங்கிய நட்பு பாராட்டு பெற்றார்.

இராஜேஸ் குமார் 1994 ஆம் ஆண்டு முதல் திமுக கழகத்தின் உறுப்பினராகவும், 1998-யில் கழக பொன்விழா ஆண்டில் கிளைக்கழக செயலாளராகவும், ஒன்றிய பிரதிநிதியாகவும், வெண்ணந்தூர் ஒன்றிய துணை செயலாளராகவும், பல்வேறு நிலைகளில் பணியாற்றி 2011முதல் 2020 வரை நாமக்கல் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராகவும் பணியாற்றினார். 2020ஆம் ஆண்டு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக கழக பொறுப்பாளராக நியமிக்கபட்டார்.

மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக நியமிக்கபட்ட பிறகு தனது கடுமையான உழைப்பால் நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் நாமக்கல் , இராசிபுரம் , சேந்தமங்கலம் (தனி) ஆகிய அதிமுக வசம் இருந்த சட்டசபை தொகுதிகளை திமுக வசமாக்கினார். கொங்கு மண்டலத்தில் 100 சதவிகித வெற்றி பெற்ற மாவட்ட செயலாளர் என்ற பெருமைக்குரியவர். தனக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கபடவில்லை என்றாலும், மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க.கழகம் வெற்றி பெற பாடுபட்டவர் என்று தமிழக முதலமைச்சர் அவர்களால் பாராட்டு பெற்றவர்.

திமுக தலைமை கழகத்தின் இளைஞர் அணி சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் நடத்தப்படும் மாநில அளவிலான கவிதை- கட்டுரை போட்டியை 2016 ஆம் ஆண்டு நாமக்கல்லில் மிகச் சிறப்பாக நடத்தி தி.மு.க தலைவரின் பாராட்டை பெற்றார்.2019 ஆம் ஆண்டு திமுக சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்தபட்ட  கிராம சபை கூட்டத்தில் பங்கு பெற்று சிறப்பாக நடத்தியவர் என்ற பாராட்டை பெற்றார். தி.மு.க.தலைமை கழகத்தின் சார்பாக 11-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் திமுக உறுப்பினர் அட்டை வழங்கும் ஆணையாளராக சென்று சிறப்பாக பணியாற்றியவர் என்ற பாராட்டை பெற்றார்.

அதேபோன்று தி.மு.க.அறிவித்த அனைத்து ஆர்பாட்டம் போராட்டங்களிலும் சிறு வயது முதலே பங்கு கொண்டு சிறை சென்றார். இராசிபுரம் பகுதியில் திராவிட முன்னேற்ற கழகத்தை வளர்த்ததில் மிகப்பெரிய பங்கு இவருடைய தாத்தாவிற்கு உண்டு .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − = 14