மாத்தூரில் 9 டன் ரேஷன் அரிசி அதிரடி பறிமுதல்!

திருச்சி புதுக்கோட்டை மாவட்ட எல்லையான மாத்தூர் கைனாங்கரை பகுதியில் உள்ள அரவை மில்லில் 9 டன் ரேஷன் அரிசி அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி புதுக்கோட்டை மாவட்ட எல்லையான மாத்தூர் கைனாங்கரை பகுதியில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி விற்பனைக்கு வாங்கி மாவாக அரைத்து விற்கும் மில் ஒன்று அந்த பகுதியில் இயங்கி வருவதாக வி.ஏ.ஓ., ஜோதி பிரகாசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் அளித்த தகவலின் படி, குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு மண்டல எஸ்.பி., சுஜாதா தலைமையில் டி.எஸ்.பி., சுதர்சன்,  குளத்தூர் தாசில்தார் சக்திவேல், வட்ட வழங்க அலுவலர் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அதிகாரிகளை கண்டதும் அரவை மில் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர் ஆகியோர் அரவை மில்லில் இருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். மேலும் அரிசியை ஏற்றிக்கொண்டு ஆம்னி வேன் ஒன்று அரிசியுடன் வந்தபோது அதிகாரிகளை கண்டதும் ஆம்னி வேனை அங்கேயே விட்டுவிட்டு அவர்களும் தப்பி ஓடினர். அதிகாரிகள் நடத்திய ஆய்வில் ரேஷன் அரிசியை விற்பனைக்கு வாங்கி அரைத்து மாவாக விற்பது தெரியவந்தது.

இதை தொடர்ந்து அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த 9 டன் ரேஷன் அரிசி மற்றும் மாவு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 40 = 50