மாதூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் உலக மீன்வள தின விழா கொண்டாட்டம்

காரைக்கால் மாதூரில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் உலக மீன்வள தின விழா கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு வேளாண் அறிவியல் நிலையத்தின் முதல்வர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயசங்கர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். உலக மீன் உற்பத்தியில் நமது நாட்டின் பங்கு, மீன் வளர்ப்பில் விவசாயிகளுக்கு கிடைக்கும் வருவாய் பெருக்கம் மற்றும் மீன் உண்பதால் கிடைக்கும் சத்துக்கள் பற்றி அவர் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து வேளாண் நிலைய கால்நடை தொழில்நுட்ப வல்லுநர் மருத்துவர் கோபு ஒருங்கிணைந்த முறையில் மீன் வளர்ப்புடன் சேர்ந்து ஆடு, மாடு, கோழி வளர்ப்பு முறைகள் மற்றும் அதனால் கிடைக்கும் கூடுதல் வருமானம் பற்றி விளக்கி கூறினார். மீன்வள உதவி ஆய்வாளர் முருகேசன், நவீன மீன் வளர்ப்பு முறைகள் மற்றும் மீன் வளர்ப்பில் கிடைக்கும் வருவாய் பெருக்கம் பற்றி எடுத்துரைத்தார்.

அதைத் தொடர்ந்து நெடுங்காடு, சுரக்குடி, விழிதியூர் பகுதியை சேர்ந்த மூன்று மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கு முன்னோடி செயல் விளக்க குளம் திட்டத்தில் தலா ஒருவருக்கு 1,250 எண்ணிக்கையில் துரிதமாக வளரக்கூடிய புதிய ரக கிப்ட் திலேபியா மீன் குஞ்சுகளை வேளாண் நிலைய முதல்வர் வழங்கினார். நிறைவாக தோட்டக்கலை துறை தொழில்நுட்ப வல்லுநர் கதிரவன் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 26 மீன் வளர்ப்பு விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 3 = 6