‘மாண்டஸ் புயல்’ கோர தாண்டவமாடியது!: முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் வழங்கல்; திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் அதிகபட்சமாக 25 செ.மீ., மழை கொட்டித்தீர்த்தது

தமிழகத்தில் மாண்டஸ் புயல் கோர தாண்டவமாகி சென்னையை கடந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் 25 செ.மீ., மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகள் வழங்கி மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

வங்கக் கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவும், புயலாகவும் வலுவடைந்தது. இதற்கு ‘மாண்டஸ்’ என்று பெயரிடப்பட்டது. இந்தாண்டு வடகிழக்கு பருவமழையின் முதல் புயல் இது ஆகும். இது கடும் புயலாக வலுப்பெற்ற நிலையில், தீவிர புயலாகவும் மாறி தமிழகத்தை அச்சுறுத்தியது.

தொடர்ந்து வங்க கடல் பகுதியில் நேற்று காலை வரை நிலைக்கொண்டு இருந்தது. இதன் காரணமாக, தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்கள் உள்பட மாநிலத்தின் பல பகுதியில் கன முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று ஆய்வு மையம் தெரிவித்தது.

அதன்படி, தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள் உள்பட சில இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 7 செ.மீ., என்ற அளவில் கனமழை பதிவாகியிருந்தது. புயல் மற்றும் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டன.

தீவிர புயல், மீண்டும் புயலாக வலுவிழந்து தமிழக வட கடலோர பகுதியை நோக்கி வந்தது. இச்சூழலில் மாண்டஸ் புயலின் வெளிப்பகுதி மாமல்லபுரம் அருகே கரையை கடக்கத் துவங்கியது. மணிக்கு 14 கி.மீ., வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் புயல் கரையை கடந்து வருவதால் 70 கி.மீ., முதல் 80 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசி வீசியது. மாண்டஸ் புயல் கரையை கடக்கத் தொடங்கியதால் சென்னை முழுவதும் பலத்து சூறைக்காற்று கோரதாண்டவம் ஆடியது.

இந்நிலையில் சென்னை மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயலின் மையப்பகுதி இன்று நள்ளிரவு 2.30 மணி அளவில் கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் எதிரொலி – வண்டலூர் பூங்கா மூடல்!

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், “மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்தது. மாண்டஸ் புயல் தொடர்ந்து வலுவிழந்து வருகிறது. இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். வட உள் மாவட்டங்களின் வழியே கடந்து செல்லும். சென்னையில் இருந்து தற்போது 30 கி.மீட்டர் தெற்கு-தென் கிழக்கே மாண்டஸ் புயல் நகர்ந்து கடந்து விட்டது” என்று தெரிவித்தார்.

புயல் கரையை கடந்துள்ளதால் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. இடனிடையே சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றால் மின்சார கம்பங்கள் ஆங்காங்கே சாய்ந்தன. சென்னையில் பல பகுதிகளில் சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மரங்கள் சாலைகளின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. புயல் கரையை கடந்த நிலையிலும், தமிழகத்தில் இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை வெம்பத்துாரில் 25 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. அடுத்தபடியாக ராணிப்பேட்டை பணம்பாக்கத்தில் 20 செ.மீ., ஆவடியில் 17 செ.மீ., குன்றத்துாரில் 15 செ.மீ., பெரம்பலுார் 14 செ.மீ., மகாபலபுரம், சோழவரம் 13 செ.மீ., மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் மழையால் பாதிக்ப்பட்ட இடங்களுக்கு அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு மற்றும் அரசு அதிகாரிகளுடன் நேரில் சென்ற முதல்வர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து உதவிகள் வழங்கியதுடன் பாதிக்கப்பட்ட இடங்களை உடனே சீரமைக்குமாறு அதிகாரிகளுக்கு உடனுக்குடன் உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 6 = 4