மாணவர்களுக்கு உபகரணம் வழங்கல் சசிகுமார் நலபணி இயக்கம் ஏற்பாடு

அன்னவாசல் அருகிலுள்ள லெக்கனாப்பட்டியில் சசிகுமார் நலபணி இயக்கத்தின் ஆலோசனை கூட்டம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

சசிகுமார் நலபணி இயக்கத்தின் சார்பாக லெக்கனாப்பட்டியில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளியில் பயின்று வந்த 120 குழந்தைகளுக்கு இலவச நோட், பேனா, பென்சில், ரப்பர், அளவுகோல் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. அதை தொடர்ந்து ஒரு ஏழை குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர் ரெங்கன், மாவட்ட பொருளாளர் ரமேஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அழகர்சாமி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + = 25