மாஜி ஜனாதிபதி அப்துல்கலாம் 93-வது பிறந்த நாள் அறந்தாங்கி அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம்

அறந்தாங்கி அருகே கட்டுமாவடியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்  93வது பிறந்தநாளை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

பெரியமாடு, சின்னமாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் சென்னை, கோவை, திருப்பூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 87 மாட்டு வண்டிகள் போட்டியில் கலந்து கொண்டன.

பெரியமாட்டிற்கு இலக்கை அடைந்து திரும்பி வர 8 மைல் தொலைவும், சின்னமாட்டிற்கு 6 மைல் தொலைவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. போட்டியில் கலந்து கொண்ட மாட்டு வண்டிகள் நிர்ணயிக்கப்பட்ட பந்தைய இலக்கினை நோக்கி ஒன்றன்பின் ஒன்றாக முந்திச் சென்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் சாரதிகளுக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கப்பரிசம், கோப்பைகளும் வழங்கப்பட்டன.

பந்தயத்தைக் காண சாலையின் இருபுறமும் நின்று 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கண்டு ரசித்தனர். மணமேல்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 4 = 3