மழை, வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு தொண்டு நிறுவனம் நிவாரணம் வழங்கல்

சீர்காழி அருகே கருக்குடி கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

சீர்காழி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகள் மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது. கடும் வெள்ளத்தில் சிக்கி வீடு மற்றும் பொருட்களை இழந்த மக்களுக்கு, தொண்டு நிறுவனங்கள் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கருக்குடி கிராமத்தில் இளைஞர் அருட்பணி இயக்கம் டேனியல் ராஜ் தலைமையில் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அரிசி, மளிகை உள்ளிட்ட  நிவாரண பொருட்கள்  வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கவிஞர்.கவிமோகன் மற்றும் தொண்டு நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 37 = 42