கறம்பக்குடி அருகே மழையூரில் காவல் நிலையம் தொடங்கப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது, ஆய்வாளா் காவல் நிலையமாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா மழையூரில் ஆங்கிலேயா்களால் இன்றைய தேதியில் அதாவது 26/04/1923 ம் ஆண்டு புறக்காவல்நிலையம் தொடங்கப்பட்டது, இந்த புறக்காவல் நிலையம் திருச்சி மாவட்டம் மணப்பாறை காவல் நிலையத்தின் கீழ் செயல்பட்டு வந்தது,மேலும் இங்கு காவலா் பயிர்ச்சி மையமும்,காவலா் குடியிருப்புகளும் இருந்தது,நீண்ட காலமாக புறக்காவல் நிலையமாக செயல்பட்டு வந்ததை கடந்த 2012ம் ஆண்டு உதவி ஆய்வாளா் காவல்நிலையமாக உயா்த்தபட்டது.
இந்த காவல் நிலையம் 50 குக்கிராமங்களை கொண்டுள்ளது,தற்போது காவல் நிலைய கட்டிடமும்,காவலா்கள் குடியிருப்புகளும் புதியதாக கட்டப்பட்டு வருகிறது,நூறு ஆண்டுகளை கடந்த மழையூா் காவல்நிலையத்தை ஆய்வாளா் காவல்நிலையமாக தரம் உயா்த்தி தர அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.