மலேசியாவுக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற அறந்தாங்கி சேர்ந்த நபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியாவிற்கு இருமல் மருந்து எடுத்து செல்ல இருந்த நபர் கைது செய்யப்பட்டிருந்த வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து புதுக்கோட்டை அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் போதை பொருள் தடுப்புச்சட்டம் சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சேர்ந்த சோலையப்பன் 58 வயதான இவர் கடந்த 2019ஆம் ஆண்டு திருச்சியில் இருந்து விமானத்தில் மலேசியாவிற்கு இருமல் மருந்தை எடுத்துச்செல்ல இருந்துள்ளார். அங்கு விமான நிலையத்தில் ஸ்கேன் சோதனையில் இருமல் மருந்து அளவுக்கு அதிகமாக இருந்தது தெரியவந்தது மொத்தம் 95 பாட்டிலில் தலா 100 கிராம் எடை அளவில் மொத்தம் ஒன்பதரை கிலோ இருந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சந்தேகமடைந்த மதுரை மத்திய போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசார் விசாரணை நடத்தினார். இருமல் மருந்தில் போதைப்பொருள் கலந்து அதனை அவர் மலேசியாவுக்கு கடத்திச் செல்ல இருந்ததும் அதற்கு குருவி போல் செயல்பட்டதும் தெரிய வந்தது இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார். தொடர்ந்து அந்த வழக்கு குறித்து புதுக்கோட்டை அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் போதை பொருள் தடுப்பு சட்டம் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி வந்தனர்.இன்று சோலையப்பன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூபாய் ஒரு லட்ச ரூபாய் அபராதம் கட்ட உத்தரவிட்ட நீதிபதி குருமூர்த்தி அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார். தீர்ப்புக்குப் பின்னர் சோலையப்பன் திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 6