மரம் தங்கசாமி நினைவு நாள்: ஈஷா முன்னெடுத்துச் செல்லும் மரங்கள் நடும் விழா!!!

மரம் தங்கசாமி நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் வரும் 3 நாட்களுக்கு மரக்கன்றுகளை நடும் பணியை ஈஷா காவிரி கூக்குரல் இயக்கம் முன்னெடுத்து நடத்துகிறது.

வாழ்வோம் மரங்களுடன் என்று முழங்கி மரங்களுடன் வாழ்ந்து சென்றவர் மரம் தங்கசாமி ஐயா. தன் வாழ்நாள் முழுவதும் மரங்களுடன் வாழ்ந்த தங்கசாமி  அவர்கள் 2016-ல் ஒரு மரத்திற்கு உரமானார். இவர் மரணத்திற்கு பின்பும் எண்ணங்களால் நம்முடன் வாழ்கிறார். இவரின் நினைவு நாளை முன்னிட்டு இன்று முதல் வரும் மூன்று நாட்களுக்கு தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களில் விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு  மொத்தம்  2,37,449 மரக்கன்றுகளை நடும் பணியை ஈஷா காவிரி கூக்குரல் இயக்கம் முன்னெடுத்து நடத்ததுகிறது.

காவேரிகூக்குரல் கள பணியாளர்கள் மண்ணுக்கேற்ற மரங்களை தேர்ந்தெடுப்பதில் விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்கி வருகின்றனர். இதன்மூலம் 175 விவசாயிகள்  1008 ஏக்கரில் டிம்பர் மரங்களான தேக்கு, மகாகனி,வேங்கை,மலைவேம்பு,செம்மரம்,சந்தனம், ஈட்டி, மஞ்சள் கடம்பு போன்ற உயர் மதிப்புள்ள  மரங்களை நடவு செய்கின்றனர்.

இதில் முதல் மரக்கன்றை  மரம்தங்கசாமி அவர்களின் மகன் தங்க கண்ணன் மற்றும்  தனபதி ஆகியோர் இணைந்து மரம்நடவுசெய்து துவங்கி வைத்தனர். மேலும் இந்நிகழ்வில் கல்லுக்காரன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி முத்து மற்றும் செயலாளர் பசுமை தேசம் வாராப்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் சதீஷ்குமார், புதுக்கோட்டை மரம் அறக்கட்டளை சார்பாக மரம் ராஜா  செரியலூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் மேலும் கத்துக்குட்டி பட தயாரிப்பாளர் நெடுவாசல் ராம்குமார் ஆகியோர் கலந்துகொண்டு மரம் நட்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வு புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லுக்காரன்பட்டியில் விவசாயி ராஜா தோட்டத்தில் நடைபெற்றது. இங்கு 12 ஏக்கரில் 3070 மரக்கன்றுகள் நடப்பட்டன.

மரம் தங்கசாமி ஐயா அவர்கள் மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி டாக்டர் நம்மாழ்வார் ஐயா அவர்களின் இயற்கை பணியில் இணைந்து இயற்கை விவசாயத்தை தமிழகம் முழுவதும் பரவச்செய்தார். நம்மாழ்வார் ஐயா அவர்கள் இவரின் காட்டிற்கு ‘கற்பகச்சோலை’ என பொருத்தமாகப் பெயரிட்டுள்ளார். சேந்தன்குடி நகர கூட்டுறவு சங்க தலைவர், மாவட்ட பட்டு வளர்ப்பு சங்க தலைவர், திருச்சி வானொலி உழவர் சங்கம் அமைப்பாளர் என பல்வேறு மாநில மத்திய அமைப்புகளில் பொறுப்பேற்று இயற்கையை மேம்படுத்தும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இவரின் பணியைப் பாராட்டி பல்வேறு அமைப்புகள் பல விருதுகளை வழங்கியுள்ளன. 2008-ம் ஆண்டு தமிழக அரசு சுற்றுச்சூழல் துறை அறிஞர் அண்ணா விருது வழங்கி சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

Similar Articles

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + 3 =

Advertismentspot_img

Instagram

Most Popular

x
error: Content is protected !!
%d bloggers like this: