மயிலாடுதுறை மீனவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் எட்டு நாட்களாக நடைபெற்று வந்த மீனவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்ததது , 20கிராம மீனவர்கள் இன்று மீன்பிடிக்கச் சென்றனர்.

சுருக்குமடி வலையை பயன்படுத்துவது தொடர்பாக திருமுல்லைவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கும், தரங்கம்பாடி, வாணகிரி மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது விசைப்படகு, பைபர் படகு மீது மோதிய விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர். இதன் காரணமாக, நான்கு பைபர் படகுகளுக்கு தீ வைக்கப்பட்டது. தகராறு தொடர்பாக நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்திருந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய படகை பறிமுதல் செய்ய வலியுறுத்தி 20கிராம மீனவர்கள் கடந்த எட்டு நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

20ஆம் தேதியன்று, விபத்துக்கு காரணமான விசைப்படகு மற்றும் சுருக்குமடி வலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், ஆட்சியரிடம் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு காணப்பட்டதால், மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து எட்டு நாட்களுக்குப் பின், 20 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 1 =