மயிலாடுதுறையில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு சேவை செம்மல் விருது

மயிலாடுதுறை சென்ட்ரல் ஷைன் லயன்ஸ் சங்கம் சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிவரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

சங்கத்தலைவர் தாமரைச்செல்வி தலைமை வகித்தார். அரசு மருத்துவ அதிகாரி ரவிக்குமார், லயன்ஸ் மாவட்ட தலைவர் மோகன்ராஜ், மண்டல தலைவர் மதியரசன், மயிலாடுதுறை சென்ட்ரல் லயன்ஸ் தலைவர் சிவலிங்கம், ஷைன் லயன்ஸ் சங்க செயலாளர் வேல்விழி, பொருளாளர் மஹாலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு தன்னலம் பாராமல் தியாக உணர்வோடு மருத்துவ சிகிச்சை அளித்த மயிலாடுதுறை நகர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு சென்ட்ரல் ஷைன் லயன்ஸ் சங்கம் சார்பில் “சேவை செம்மல்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதில் சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், லயன்ஸ் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.