டில்லியில் படுகொலை செய்யப்பட்ட பெண் காவலர் சபியாவிற்கு நீதி கேட்டும், குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் மெத்தனம் காட்டும் மத்திய அரசை கண்டித்தும் மதுரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் வடக்கு மாவட்டம் சார்பில் தெற்கு வாசலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமுமுக வடக்கு மாவட்ட தலைவர் சீனி முகமது தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் இப்னு முன்னிலை வகித்தார். ம.ம.க., மாவட்ட செயலாளர் அப்பாஸ், பொருளாளர் கஜினிமுகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொது செயலாளர் முகமதுகவுஸ் கோஷங்களை எழுப்பினார். மாநில செயலாளர் அப்துல்காதர் மர்பஈ, மாநில அமைப்பு செயலாளர் காதர்மைதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் லியாக்கத் அலி, சிபிஎம் மாவட்ட செயலாளர் விஜயராகவன், இஸ்லாமிய அமைப்பாளர் அய்யூப் அலி பைஜி, சாகுல்ஹமீது, மாலின், அப்துல்ரபி,அகமது அப்துல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.