மத்தியில் மோடி அரசு இந்தியாவை பாதுகாத்து வருகிறது. மோடியின் செயல்பாட்டால் லடாக் பகுதி பாதுகாக்கப்பட்டுள்ளது: மதுரை ஆதீனம்

”விநாயகர் சதுர்த்தி இன்றல்ல நேற்றல்ல, வெள்ளையர்களை எதிர்த்து கொண்டாடப்பட்ட விழா. அதற்கு தடை விதித்திருப்பது சரியல்ல. ”விநாயகர் சதுர்த்தியை அரசு ஏற்று நடத்த வேண்டும்,” என மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிகர் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், வ.உ.சி., உருவச் சிலைக்கு மாலை அணிவித்த பின், மதுரை ஆதீனம் மேலும் கூறியதாவது;வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிறது அரசு. இதே சூழலை மற்ற மதங்களிலும் செயல்படுத்துவாரா. ஒவ்வொரு மதங்களிலும், பல்வேறு பிரிவுகள் உள்ளன.அவர்களுக்குள்ளும் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஆகவே, ஒரு மதத்தில் மட்டும் அனைத்து விஷயத்தையும் புகுத்துவது தவறு,மத்தியில் மோடி அரசு, இந்தியாவை பாதுகாத்து வருகிறது. மோடியின் செயல்பாட்டால் லடாக் பகுதி பாதுகாக்கப்பட்டுள்ளது; இல்லையென்றால் பராக் ஆகியிருக்கும். படிக்கும் மாணவர்கள் பாஸ் மார்க் வாங்குகின்றனரோ, இல்லையோ, ‘டாஸ்மாக்’ சென்று சரக்கு வாங்கு கின்றனர். இளைஞர்களை பாதுகாக்க மதுக்கடைகளை மூட வேண்டும். இன்றைய இளைஞர்கள் அரசியல் மற்றும் சினிமாவால் குழம்பியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 3 = 2