மதுரை மாவட்டம் புதூர் காவல் நிலையத்தில் பாரம்பரிய உடை அணிந்து சமத்துவ பொங்கல் விழா

மதுரை புதூர் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா மாடுகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தைத்திருநாளை ஒட்டி கோலாகலமாக காவல் நிலைய வாசலில் வண்ண கோலத்துடன் கரும்பு மஞ்சள் கிழங்கு மகாலட்சுமி படத்துடன் மேளதாளம் முழங்க தாரை தப்பட்டை உடன் பொங்கல் விழா நடைபெற்றது, விறகு அடுப்புகளில் புதிய பானையில் புத்தரி பொங்கல் படைத்து ஜல்லிக்கட்டு மாடுகளை அழைத்து வந்து அதற்கு பூ ,சந்தனம், பச்சரிசி ,பொங்கல் வழங்கி விழா கொண்டாடி சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.

இதில் காவல் ஆய்வாளர்கள் பாரம்பரிய உடை அணிந்து மகிழ்ந்தனர், நிகழ்ச்சிக்கு அண்ணா நகர் சரகம் உதவி ஆணையர் சூரக்குமார் தலைமை தாங்கினார், புதூர் இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டியன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாட்டுத்தாவணி இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், அண்ணாநகர் இன்ஸ்பெக்டர் சாது ரமேஷ், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அனுராதா ஆகியோர் வரவேற்றனர், இந்நிகழ்ச்சியில் புதூர் சப் இன்ஸ்பெக்டர்கள் ஜெய்சங்கர், ராஜகோபால், சித்தார்த் காவல்துறை  தலைமை காவலர்கள் அனைத்து காவல் நிலைய காவலர்கள் மகளிர் காவலர்கள் உள்பட பகுதி பொதுமக்களும் கலந்து கொண்டு வெகு சிறப்பாக விழா கொண்டாடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

62 − 55 =