மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் சித்த மருத்துவர்கள் கலந்தாய்வு நடைபெற்றது, இக்கலந்தாய்வு கூட்டத்தில் 2006ல் தமிழக வனத்துறை மேய்சல்காரர்கள், கிடை மாடு மேய்ப்பவர்கள் வனத்திற்குள் செல்ல தடை நீக்குதல் உள்பட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தமிழ் நாடு மேய்ச்சல் சமூக கூட்டமைப்பு, தமிழர் மரபு வேளாண்மை கூட்டமைப்பு மற்றும் மரபுவழி சித்த மருத்துவ கூட்டமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது, கூட்டத்திற்கு தமிழர் மரபுவழி கூட்டமைப்பு தலைவர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார், மேய்ச்சல் மற்றும் கிடை மாடு கூட்டமைப்பு தலைவர் இளஞ்சென்னி முன்னிலை வந்தார், மரபுவழி சித்த மருத்துவ கூட்டமைப்பு தலைவர் புண்ணியமூர்த்தி உள்ளிட்ட 60 பேர் கலந்துகொண்டனர்.
தலைவர் வெங்கட்ராமன் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, தமிழக அரசு உயிர்மை வேளாண்மை தற்சார் நலவாரியம் அமைக்க வேண்டும், கிடை மாடு மேய்பவர்களுக்கு நலவாரியம் ஏற்படுத்த வேண்டும், காடுகளில் மேய்சல் தடை நீக்கிடவும்
சித்த மருத்துவம் சார்பில் எய்ம்ஸ் சித்தா மருத்துவமனையை திருச்சி அல்லது தஞ்சையில் உருவாக்க வேண்டும், மரபு வழி மருத்துவம் சார்பில் வரும் மார்ச் – 7ல் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெறும் என்பன போன்ற பல கோரிக்கைகளை முன் வைத்து மேய்சல் சமுகத்தை அங்கிகரிக்காமல் காட்டை வளர்க்க முடியாது என வெங்கட்ராமன் கூறினார்.