மதுரை ஐகோர்ட்டில் மஞ்சப்பை விற்பனை தானியங்கி இயந்திரங்கள் துவக்கி வைப்பு

சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளையில் இன்று ஐந்து மஞ்சப்பை விற்பனை தானியங்கி இயந்திரங்கள் மற்றும் இரண்டு பிளாஸ்டிக் குவளை நசுக்கும் இயந்திரங்கள் நிறுவி செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த முயற்சியை சென்னை உயர்நீதிமன்ற, மதுரை கிளை நீதிபதி மகாதேவன், தமிழகஅரசின் கூடுதல் தலைமை செயலாளர், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை  சுப்ரியா சாஹு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தலைவர் ஜெயந்திமுரளி முன்னிலையில் தொடங்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர்,  மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங்கஹ்லோன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடையை ஆதரிப்பதற்காகவும், மாநிலத்தில் சுற்றுச்சூழல் மாற்றங்களை மேம்படுத்துவதற்காகவும் தமிழகஅரசு இதுபோன்ற திட்டங்களை மேற்கொண்டு செயல்படுத்தி வருவதாக தெரிவித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 51 = 53