மதுரை ஆதீனத்தின் 292வது பீடாதிபதியான அருணகிரிநாதர் உடல் நல்லடக்கம்

மதுரை ஆதீனத்தின் 292வது பீடாதிபதியான அருணகிரிநாதர் உடல் இந்துமத சாஸ்திரப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.

மதுரை ஆதீனத்தின் 292வது குருமகா சச்சிதானந்தமாக இருந்து வந்த 77 வயதான அருணகிரிநாதர், உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை முதல் சிகிச்சைபெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி காலமானார்.

இதனையடுத்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே அமைந்துள்ள மதுரை ஆதீன மடத்திற்கு கொண்டுவரப்பட்டு, அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அவரது உடலுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்ட பின்னர், இன்று மதியம் அவரது உடல் நான்கு மாசி வீதிகளிலும் ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டு முனிச்சாலை பகுதியில் உள்ள மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் இந்துமத சாஸ்திரப்படி சடங்குகள் செய்யப்பட்டு, அமர்ந்த நிலையிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

மேலும் அருணகிரிநாதரின் உடலுக்கு பல அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

89 − = 88