விசிக திருமாவளவனை கண்டித்து மதுரையில் பாஜக பட்டியல் அணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை தமுக்கம் மைதானம் தமிழன்னை சிலை முன்பாக விழுப்புரம் கள்ளக்குறிச்சியில் மாநில பாஜக பட்டியல் அணி மாநிலத் தலைவர் தடா பெரியசாமி மீதான தாக்குதலை கண்டித்து மதுரை மாநகர் மாவட்ட பாஜக பட்டியல் அணி தலைவர் அலெக்ஸ் பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில செயலாளர் சரவணன், மேற்கு மாவட்டத் தலைவர் முத்துமாரி, துணைத்தலைவர் கதிரேசன் முன்னிலை வகித்தனர், மாவட்டத் துணைத் தலைவர் குமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார், ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வேண்டும், விசிக தலைவர் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்பது போன்ற கருத்துகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பட்டது, ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் சுப்பாநாகுலு, நிர்வாகிகள் சிவாஜி, பிரகாஷ் , செல்வராஜ், சுந்தர்ராஜ் பெருமாள், உள்பட சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.