மதுரையில் பசும்பொன் தேவரை இன்ஸ்டாகிராமில் தவறாக சித்தரித்து பதிவு போட்ட நபரைக் கைது செய்யக்கோரி நேதாஜி சுபாஷ் சேனை மாநில நிறுவன தலைவர் மகாராஜன் தலைமையில், மாநில செயலாளர் சுமன் முன்னிலையில் 100-க்கு மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தினை முற்றுகையிட்டனர். இதனையடுத்து அங்கு வந்த மதுரை கமிஷனர் மற்றும் டிசி சாய்பிரனீத் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஏற்கனவே கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் இன்ஸ்டாகிராம் பதிலுக்காக காத்திருப்பதாகவும் 10 நாளைக்குள் கைது செய்து விடுகிறோம் என்று விளக்கம் கொடுத்தனர். அதில் உடன்பாடு ஏற்பட்டதால் முற்றுகையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் பத்து நாட்களுக்குள் எதிரிகள் கைது செய்யப்படாத பட்சத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என நேதாஜி சுபாஷ் சேனை மாநில நிறுவன தலைவர் தெரிவித்தார்.