இலுப்பூர் மேட்டுச்சாலை மதர்தெரசா கல்வி குழும வேளாண்மை கல்லூரி மற்றும் அகில இந்திய விவசாய மாணவர் சங்கம் இணைந்து நடத்திய நிலையான விவசாய உற்பத்தி திறனுக்கான காலநிலையை தாங்கும் விவசாயம் பற்றிய சர்வதேச மாநாடு நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மேட்டுச்சாலையில் அமைந்துள்ள மதர் தெரசா கல்வி குழுமத்தின் வேளாண்மை கல்லூரி மற்றும் அகில இந்திய விவசாய மாணவர் சங்கம் இணைந்து நடத்திய நிலையான விவசாய உற்பத்தி திறனுக்கான காலநிலையை தாங்கும் விவசாயம் பற்றிய சர்வதேச மாநாடு நேற்று நடைபெற்றது. இம்மாநாட்டில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி காணொளி மூலம் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அவரைதொடர்ந்து மதர்தெரசா கல்வி குழுமத்தின் தாளாளர் முனைவர் இரா.சி.உதயகுமார் மற்றும் மதர்தெரசா வேளாண்மை கல்லூரியின் முதல்வர் பொறுப்பாளர் முனைவர் ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றி இம்மாநாட்டினை துவக்கி வைத்தனர். சிறப்பு விருந்தினராக குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி முதல்வர் முனைவர் நக்கீரன், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் துணை கல்லூரிகளைச் சார்ந்த பேராசிரியர்களும் பங்கேற்றனர். பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த 500க்கும் மேற்பட்ட விவசாய ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் பங்கேற்று இணைய வழி காணொளி மற்றும் நேர்முகமாக நிலையான விவசாய உற்பத்தியை மேம்படுத்துவதற்கான தங்களின் ஆராய்ச்சி சார்ந்த கருத்துக்களை விளக்க காட்சிகளாக பகிர்ந்தனர். மேலும் இம்மாநாட்டில் பங்கேற்பாளர்களை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு விருதுகள் அளித்து மிகவும் நேர்த்தியான முறையில் இம்மாநாடு நடைபெற்றது.