மண்டல மகரவிளக்கு பூஜை:சபரிமலை ஐயப்பன் கோயில் திறப்பு

கேரள மநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக இன்று நடை திறக்கப்பட்டது.

கார்த்திகை மாதம் 1-ஆம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி கோயிலுக்கு வரவுள்ள நிலையில், ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் நாளை முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

அதேபோல், தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்று அல்லது ஆர்டி-பிசிஆர் நெகட்டிவ் சான்று கட்டாயம் கொண்டுவர வேண்டுமென தேவஸம் போர்டு அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 7 = 2