மணமேல்குடி  அருகே பெருமருதூரில் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவன ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா பெருமருதூரில் உழவர் உற்பத்தியாளர் நிறுவன ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியை முன்னால் ஊராட்சி மன்றத் தலைவர் உமாபதி பிள்ளை,மணமேல்குடி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத் தலைவர் ஆர்.ராதா கிருஷ்ணன்,செயலாளர் மணிமொழியான்,பொருளாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் வரவேற்று பேசினார்.

வேளாண்மை துறை இயக்குனர்  பெரியசாமி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர், தற்போதைய உலர் உற்பத்தியாளர் நிறுவனம் ஈரோடு, துள்ளிய பண்ணை திட்ட அலுவலர் ஜே ஆர் கண்ணன் பாபு, வேளாண்மை அலுவலர் கந்தகிரி வாசன்  மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் செல்வி, பார்கவி மற்றும் தமிழ் மொழி ஆகியோர் முன்னிலை வைகித்தனர். இந்த நிறுவனத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன் குழுவின் செயல்பாடு முன்னேற்றம் பற்றி பேசியதாவது, மணமேல்குடி உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனம் 300 விவசாய பங்குதாரர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது இவர்கள் செலுத்திய பங்கு தொகை ஒரு நபருக்கு 2000 வீதம் மொத்தம் ஆறு லட்சம் உள்ளது, இதற்கு இணை பங்கு தொகையாக அரசிடம் இருந்து ரூபாய் 6 லட்சம் வந்துள்ளதால்இதனைக் கொண்டு வேளாண்மை இடு பொருட்களான விதை நெல், பூச்சி மருந்து ,உரம் ஆகியவை குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் கடந்த மாதம் வியாபாரம் தொடங்கப்பட்டது, தொடங்கிய ஒரு மாதத்திலேயே ரூபாய் 20 ஆயிரம் லாபம் கண்டுள்ளோம்.

மேலும் திட்ட நிர்வாகி கண்ணன் பாபு பேசுகையில், அரசு தனி நிதிநிலை அறிக்கை தீர்மானம்  அனைத்து இயக்குனர்கள் தொடர்ந்து குழுவில் இயங்கும் தீர்மானம், மேலும் குழுவின் பங்குதாரர்களை அதிகரிக்கும் தீர்மானம் ஆகியவை நிறைவேறியது. அதனைத் தொடர்ந்து வேளாண்மை துறை இயக்குனர் பெரியசாமி பேசுகையில் வேளாண்மை சார்ந்த திட்டங்களை இளைஞர்களின் அனைத்து கிராம திட்டம் மற்றும் இயந்திரங்கள் மானிய விவரங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தும்  இயக்குனர்கள் பேசுகையில்  உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் வரும் காலங்களில் கால்நடைகளுக்கு தேவையான தீவனம் உற்பத்தி செய்யும் திட்டத்தில் உள்ளது என்றும், அதை விற்பனை செய்தும், விவசாயிகளிடமிருந்து தேங்காய் கொப்பரைகள் பெறப்பட்டு மதிப்பு கூட்டி அதை விற்பனை செய்து லாபம் பார்க்கும் திட்டம் எல்லாம் உள்ளதாகவும் கூறினார்கள். இறுதியில் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனச் செயலாளர் மணி மொழியான் நன்றி கூறினார், நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − 12 =