புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே உள்ள கீழக்காவனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் மாசி சிவராத்திரியை ஒட்டி வினோத வழிபாடு நடைபெற்றது.
கீழக்காவனூர் கிராமத்தில் வருடம் தோறும் நடக்கும் இத்திருவிழாவில் ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பக்தர்கள் டிராக்டர், டாட்டா ஏசி வாகனத்தின் மூலம் அங்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். பக்தர்கள் பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல், அலகு குத்தி காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்கள் செலுத்தி வழிபடுவர். பின்பு கோவில் பூசாரி சாட்டையுடன் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் வாக்கு வழங்குவார். பெண்களுக்கு தோஷம் என்றால் அவர் சாட்டை வைத்திருப்பதில் அடித்து அவர்களுக்கு தோஷத்தை நிவர்த்தி செய்வதாக ஐதீகம். அதன் ஒரு பகுதியாக இன்று திருவிழா விமர்சையாக அங்கு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்