மணமேல்குடி அருகே கட்டுமாவடியில் சட்டவிரோதமாக 150 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டிணம் உட்கோட்டம் மணமேல்குடி காவல் நிலையம் உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட காவல் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை உதவி ஆய்வாளர் திரு. பாலமுருகன் குழுவினர் நடத்திய அதிரடி சோதனையில் கட்டுமாவடி கடைத்தெருவில் உள்ள பெனாசிர்கான் (42) தஃபெ முகைதீன் அப்துல்காதர் கடற்கரைதெரு, கட்டுமாவடி என்பவருக்குச் சொந்தமான KSM மளிகை கடை குடோனில் சுமார் 111 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களும்,மேலும்அப்பொருட்களை பதுக்க உதவிய மேற்படி நபரின் தம்பி முகமது ரியாஸ் (25) தஃபெ முகைதீன் அப்துல்காதர் கடற்கரைதெரு, கட்டுமாவடி மேலும் மேற்கண்ட தனிப்படையினர் கட்டுமாவடி கடைவீதியில் உள்ள ஷாஜகான் (42) தஃபெ சேக் ராவுத்தர், முத்தையா நகர், கட்டுமாவடி,என்பவருக்கு சொந்தமான ஷாஜகான் பெட்டி கடையில் சுமார் 34 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களும் அப்பொருட்களை விற்பனை செய்ய பயன்படுத்திய TVS SUPER XL வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த மேற்படி 3 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரே நாளில் சுமார்150 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேற்படி வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் , வெகுவாக பாராட்டினார்கள்.