மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற இருப்பதால்  பொதுமக்கள் நடமாட தடை: மாவட்டஆட்சியர் உத்தரவு

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூர் கிராமம், வீரமலைப் பாளையத்தில் உள்ள துப்பாக்கிசுடும் இடத்தில்,வருகின்ற 11.07.2022 முதல் 12.07.2022 வரை உள்ள தினங்களில்,காலை 7.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை 22 RAJ RIF, Unit பயிற்சியாளர்களால் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. அச்சமயம் மேற்கண்டபயிற்சி தளத்தில், மேய்ச்சலுக்காக கால் நடைகள் மற்றும் மனித நட மாட்டம் எதுவும் இருக்கக் கூடாது எனவும், மேலேகுறிப்பிட்டுள்ள பயிற்சி தளத்தில் எவரும் பிரவேசிக்கக் கூடாது எனவும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

40 − 31 =