மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய மகேந்திரனுக்கு திமுகவில் புதிய பொறுப்பு

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்த டாக்டர் மகேந்திரனுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் இணைச் செயலாளராக டாக்டர் மகேந்திரன் நியமிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருக்கிறார். ஏற்கெனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்றுவார்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.