மக்கள் குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தை – வனப்பகுதியில் விடுமாறு கோரிக்கை

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் குடியிருப்பு பகுதியில் உலாவும் சிறுத்தையால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

 கோரேகான் பகுதி உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் வளாகத்திற்குள் சிறுத்தை புகுந்துள்ளது. எனினும் வீட்டிற்குள் செல்லாமல் சென்றது அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

 பிரதான வீதியில் உலவும் சிறுத்தையால் முதியோர், சிறியவர்கள் வெளியே நடமாட அச்சப்படுவதால் அதனை பிடித்து வனப்பகுதியில் கொண்டுவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.