மகாளய அமாவாசையைமுன்னிட்டு : சேலம் மாவட்டம் ஆத்தூர் உழவர்சந்தையில் 49 டன் காய்கறிகள் ரூ.17 லட்சத்துக்கு விற்பனை

மகாளய அமாவாசையை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் உழவர் சந்தை களைகட்டியது.

அதன்படி, இன்று புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு அனைத்து உழவர் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், வீடுகளில் முன்னோர்கள், மற்றும் சாமிக்கு பூஜைகள் செய்து, படையலிட்டு சமைப்பதற்காகவும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அதிகளவில் வாங்கி சென்றனர். பழங்கள், தேங்காய், வாழை இலை, கீரை வகைகள், பூசணிக்காய், காய்கறிகள் உள்ளிட்டவை அதிகளவில் விற்பனை ஆனது. இதே போல் பூக்கள் வியாபாரமும் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் மாவட்டத்தில் ஆத்தூர், மேட்டூர், ஜலகண்டாபுரம் , எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி , ஆட்டையாம்பட்டி ஆகிய 11 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. இந்த சந்தைகளில் வழக்கத்தைவிட அமாவாசை நாட்களில் கூடுதலாக காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனையாவது வழக்கம். ஆத்தூர் உழவர் சந்தைக்கு அதன் சுற்றுவட்டார பகுதிகளை, இருந்து ஏராளமானோர் காய்கறி, கனி வகைகளை வாங்க குவிந்தனர். சுமார் 49 ஆயிரம் டன் காய்கறிகள் ரூ.17 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.