மகாராஷ்டிராவில் தொழிலாளர்களுடன் சென்ற லாரி கவிழ்ந்ததில் 12 தொழிலாளர்கள் பலி.

மகாராஷ்டிராவில் நெடுஞ்சாலை திட்டப்பணிக்காக தொழிலாளர்களுடன் சென்ற லாரி கவிழ்ந்ததில் 12 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

மகாராஷ்டிர மாநில புல்தானா மாவட்டத்தில் இன்று நெடுஞ்சாலை திட்டப்பணிக்காக தொழிலாளர்கள் சென்ற லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியில் பயணித்த 12 தொழிலாளர்கள் பலியானார்கள்; 4 பேர் காயமடைந்து உள்ளனர். காயமடைந்த தொழிலாளர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சாலையில் எதிரே வந்த கார் திடீரென லாரியை நோக்கி வந்த போது, அதன் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் லாரியை திருப்பியதும் விபத்து நிகழ்ந்தாகக் கூறப்படுகிறது. பலியான தொழிலாளர்களில் பெரும்பாலனோர் பிகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்து உள்ளது. சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லக்கூடாது என்ற விதியுள்ளது. அதைப் பின்பற்றி இருந்தால் இவ்வளவு தொழிலாளர்கள் உயிரிழந்திருக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.