
வடசென்னை கிழக்கு மாவட்ட தமிழ் வளர்ச்சி பிரிவு மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன் பிரிவு சார்பில் மகாகவி பாரதியின்100வது நினைவேந்தல் அனுசரிக்கபட்டது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோயில் தெருவில் வடசென்னை கிழக்கு மாவட்ட தமிழ் வளர்ச்சிப்பிரிவு மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன் பிரிவு சார்பில் மகாகவி பாரதியின் 100வது நினைவேந்தல் வடசென்னை கிழக்கு மாவட்ட தமிழ் வளர்ச்சி பிரிவு முனைவர் ச.சாம்பமூர்த்தி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பா.ஜ.க வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.கிருஸ்ணகுமார் முன்னிலை வகித்து மகாகவி பாரதியாரின் திருவுருவ படத்திற்க்கு புகழஞ்சலி செலுத்தினார்.இதனையடுத்து வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.கிருஸ்ணகுமார் பாரதியாரின் வாழ்க்கை வரலாறு பற்றி சிறப்புறையாற்றினார்.முன்னதாக வடசென்னை தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட துணைத்தலைவர் பி.பாஸ்கர் வரவேற்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் பாரதியாரின் 100வது நினைவுதினத்தை அனுசரிக்கும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.கலைநிகழ்ச்சியில் பரத நாட்டியம் நிகழ்த்தி காட்டிய மோனிஷா,பாவனா,வர்ஷினி.மாருவேடம் போட்டியில் பாரதியாக அஜய் ஜோசித்,மணீஸ் மூர்த்தி,சாய் தர்ஷ்னி,சாய் ஹாரிஷ்.பேச்சு போட்டியில் சிவானி,ஜெய் ஹாரிஷ்.பாட்டு போட்டியில் கவீணா ராணி ஆகிய 50திற்க்கும் மேற்பட்ட மாணவ மணிகள் கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்திகாட்டினர்.கலை நிகழ்சியில் பங்குகொண்ட மாணவ மாணவியர்களுக்கு பாரதியின் கவிதை நூல்,பேனா ஆகியன பரிசாக வழங்கபட்டது. இந்நிகழ்வில் மாவட்ட பொதுசெயலாளர்கள் வன்னியராஜன்,ஜெய்கனேஷ்,செந்தில்,மண்டல தலைவர் ரூப்சந்தர்,ஊடகபிரிவு நவீன்,சோம சுந்தரம்,வழக்கறிஞர் பிரிவு மற்றும் தமிழ் வளர்ச்சி பிரிவின் பொறுப்பாளர்கள் மோகனசுந்தரம்,தண்டபானி,அனந்தபாண்டியன்,மகளிர் அணி வடசென்னை மாவட்ட செயலாளர்கள் கவிதா லஷ்மி,இராயபுரம் மத்திய மண்டல் துனைதலைவர் ரபியா,கங்கா ஆகிய அனைவரும் மகாகவி பாரதியின் திருவுருவ படத்திற்க்கு புகழஞ்சலி செலுத்தினார்கள்.