மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு
விழிப்புணர்வு முகாம் நடத்திய கல்லூரி மாணவிகள்

சித்தன்னவாசல் அருகே மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு விழிப்புணர்வு முகாம் நடத்திய கல்லூரி மாணவிகள்

புதுக்கோட்டையை அடுத்த திருவரங்குளம் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள் சித்தன்னவாசல் கிராமத்தில் மகளிர் சுய உதவிக்குழுப் பெண்களுக்கு விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

திருவரங்குளத்தில் உள்ளது புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவிகள் தங்களது பணி அனுபவத் திட்டத்தின் ஒருபகுதியாக அன்னவாசல் அருகே சித்தன்னவாசல் கிராமத்தில் உள்ள சூரியா மகளிர் சுய உதவிக்குழுப் பெண்களுக்கு விழிப்புணர்வு முகாமை அண்மையில் நடத்தினர், வழிகாட்டி ஆசிரியராக ஆயிஷா சித்திக்கா செயல்பட்டார்.

 முகாமில் ஒன்றிய, மாநில அரசுகள் பெண்களுக்காக செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து மோட்லி ஜேனிஸ், ஸ்ரீகலா, தமிழினிகா ஆகியோரின் தலைமையிலான மாணவிகள் குழு பயிற்சி அளித்தனர். மேலும், பெண்களுக்கான வேலை வாய்ப்புகள், வருமானத்தை அதிகரித்தல் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. சுய உதவிக்குழுத் தலைவி ஜோதி தலைமை வகித்தார், முகாமில் கலந்துகொண்ட பெண்களுக்கு மகளிருக்கான திட்டங்கள் குறித்த துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 1