போஸ்டர் ஒட்டும் இடமாக மாறும் வழிகாட்டுத் தகவல் பலகைகள் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் கறம்பக்குடி பகுதிகளில் வழிகாட்டு தகவல் பலகைகளில் தொடர்ந்து போஸ்டர்கள் ஒட்டப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். ஆகையால் போஸ்டர் ஒட்டுபவா்கள்  மீது தகுந்த நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மாநில நெடுஞ்சாலைத்துறை சாா்பில் சாலை ஓரங்களில் ஒவ்வொரு ஊரின் முன்பாக ஊரின் பெயர்கள், பிாிவு சாலைகளில் குறியீட்டு தகவல்கள், அடுத்த பொிய நகரங்கள் எத்தனை கிலோமீட்டரில் உள்ளன உள்ளிட்ட விவரங்களுடன் தகவல் பலகை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேகத்தடை, வளைவுகள் உள்ளிட்ட குறியீடுகளுடன் எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பிலும் ஊரின் எல்லைப் பகுதிகளில் ஊரின் பெயரை குறிப்பிட்டு பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பலகையின் மூலம் புதிதாக அந்தப் பகுதிக்கு வருபவர்களும், வாகனங்களில் அந்த வழியே நெடுந்தூரம் பயணிப்பவர்களும் தாங்கள் இருக்கும் இடத்தை எளிதில் அறிந்து கொள்ளமுடியும். இந்த தகவல் பலகைகள் நல்ல ஒரு வழிகாட்டியாக இருந்து வருகிறது. ஆனால் ஆலங்குடி, கறம்பக்குடி பகுதிகளில் உள்ள வழிகாட்டு  தகவல் பலகைகளில் அந்தப் பகுதியில் நடக்கும் திருமணங்கள், பிறந்தநாள் வாழ்த்து, கண்ணீா் அஞ்சலி, நினைவு அஞ்சலி, அரசியல் கட்சி போஸ்டர்கள் இதில் ஒட்டப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் புதிதாக அந்த வழியை கடப்பவர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனா். வேகத்தடை குறியீடு பலகை மேலே ஒட்டப்படுவதால் வழியே செல்லும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழும் விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சில இடங்களில் போஸ்டர்களை  அப்புறப்படுத்தினாலும் அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் அதே இடத்தில் மீண்டும் போஸ்டர்கள் ஒட்டப்படுகிறது.

எனவே போஸ்டர் ஓட்டுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும், வழிகாட்டு தகவல் பலகையில் மீண்டும் போஸ்டர் ஒட்டாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar Articles

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

82 + = 86

Advertismentspot_img

Instagram

Most Popular

x
error: Content is protected !!
%d bloggers like this: