போர்ச்சுகலில் டேங்கர்கள் உடைந்த விபத்தால் வீணான 20 லட்சம் லிட்டர் ஒயின்: சாலையில் மழை, வெள்ளம் போல பாய்ந்தோடியது கிராம மக்கள் வியப்பு

தெற்கு ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் டேங்கர்கள் உடைந்த விபத்தால் 20 லட்சம் லிட்டர் ஒயின் சாலையில் மழை, வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது.

போர்ச்சுகலில் சாபோ லூரன்ஸோ டைபாரோவில் உள்ள ஒயின் தயாரிப்பாளரான லெபிரா டிஸ்டில்லரி தொழிற்சாலையில் இருந்து சுமார் 20 லட்சம் லிட்டர் ஒயின் எடுத்துச் சென்ற 2 டேங்கர்கள் உடைந்தன. 2,500 பேர் வசிக்கும் இந்த சிறிய கிராமத்தில் 2 டேங்கர்கள் உடைந்த விபத்தால் 20 லட்சம் லிட்டர் ஒயின் அந்த பகுதி சாலைகளில் மழை, வெள்ளம் போல ஓடியது.

மலைப்பிரதேச கிராமத்தில் செயல்படும் ஆலையில் இருந்து தெருக்களில் பாய்ந்தோடிய ஒயினை பார்த்து உள்ளூர் வாசிகள் வியப்படைந்தனர். செந்நிற நதியை போன்று பாய்ந்த ஒயின் மதுவை நிறுத்தும் பணியில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டனர்.