போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி, பேரணி  அறந்தாங்கியில் கோட்டாட்சியர் சொர்ணராஜ் தலைமையில் நடைபெற்றது

புகையிலை கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அதிகளவில் பயன்படுத்துவதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் 

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது

குடிப்பழக்கத்திற்கு சிறுவயதிலேயே அடிமையாகி விடுவதால் உயிரிழப்பு ஏற்படக்கூடியதை தடுக்க வலியுறுத்தியும்

போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி யுடன் கூடிய பேரணி அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி பேரணியாக சென்று அறந்தாங்கி பேருந்து நிலையம் முன்பு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டு  

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் உதவிஆணையர் எம்.மாரி, அறந்தாங்கி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் , அறந்தாங்கி 

கோட்டகலால் அலுவலர் பரணி, துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

49 + = 51