போதைக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் கையெழுத்து

போதைக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் தன் கையெழுத்தைப் பதிவு செய்தார்.

தமிழ்நாட்டில் போதைப்பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரிடையே போதைப்பழக்கம் அதிகரித்துள்ளது. இதை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போதைக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் முக்கிய நபர்களைச் சந்தித்து கையெழுத்து பெற்று வருகிறார்கள். இந்நிலையில் ரஜினிகாந்த் அந்த கையெழுத்து இயக்கத்தில் தன் கையெழுத்தைப் பதிவு செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

41 − = 36